Sunday, 27 August 2017

தமிழகத்தில் இன்று முதல் 200 ரூபாய் அறிமுகம்

தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகள் விநியாகம் செய்யப்பட இருக்கிறது.

பிரதமர் மோடி அவர்கள் கருப்பு பணத்தை மீட்கும் வகையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகினர்.

தற்போது இந்த சில்லறை தட்டுப்பாட்டை நீக்குவதற்காக புதிய 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. முதல் கட்டமாக டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் புழக்கத்திற்கு வந்த 200 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் தமிழக வங்கிகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட 200 ரூபாய் நோட்டுகள் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கிகளுக்கு மட்டும் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே இந்த 200 ரூபாய் நோட்டுகளை பெற முடியும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

0 comments: