தேனி: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான அணிகள் ஒன்றிணைந்த பிறகு, அவர்களுக்கு எதிரான செயல்பாட்டில் டிடிவி அணி இறங்கியுள்ளது. தொடக்கத்தில் டிடிவிக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேனியில் டிடிவி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், யாரோ போட்ட கட்டளையை நிறைவேற்ற ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் துடிப்பதாக தெரிவித்தார்.
டிடிவி தினகரனை யாரும் அழுக்காக்க முடியாது. அது தூசு படியாத வானம் என்று குறிப்பிட்டார். இந்த சிக்கலான நேரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்போம் என்று நம்புவோம். ஆளுநர் முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்வோம்.
தற்போது 21 எம்.எல்.ஏக்கள் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், தொடர்ந்து 60க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
0 comments: