இந்த சம்பவம் ஜார்கண்ட மாநிலத்தில் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் ராதாநகர் என்னும் இடத்தில் நடந்துள்ளது.
அந்த ஊரைச்சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் பிச்சை எடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த மாவட்டத்தில் பல பெண்களின் தலைமுடியை மர்மமாக வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத்தொடர்நது அங்குள்ள மக்கள் இந்த நான்கு பேரையும் தாக்க தொடங்கியுள்ளனர்.
இவர்கள் அவர்களுடைய பையில் தலைமுடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அந்த கும்பலில் உள்ள ஒரு பெண் நாங்கள் பிச்சைக்காரர்கள் என்று கதறியுள்ளார்.
அதையும் பொருட்படுத்தாமல் அந்த கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணின் தலையில் பெரிய கல்லை போட்டு தாக்கியுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிர் இழந்துள்ளார். அந்த பெண்ணுடைய 9 வயது மகனையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
0 comments: