Thursday, 24 August 2017

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் வசம் போககூடும் என அமெரிக்கா கவலை

வாஷிங்டன்,

டொனால்டு டிரம்ப் அரசு பாகிஸ்தான் அரசிடம் உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் பயங்கரவாதிகள் கைவசம் செல்லலாம் எனவும் தந்திரோபாய ஆயுதங்களின் வளர்ச்சியினால் நிலையானது மோசமடையலாம் என அமெரிக்கா கவலை கொண்டு உள்ளது என அந்நாட்டு அதிகாரி கூறிஉள்ளார்.
 
டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

டிரம்ப் பேச்சை அடுத்து பாகிஸ்தானுக்கு அடுக்கடுக்காக நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிகாரிகளின் எச்சரிக்கையானது இருந்து வருகிறது. அமெரிக்காவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு பாகிஸ்தானுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா வான்வழி தாக்குதலை தொடங்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறினார்.

இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து பொருள் மற்றும் நிதி உதவியை நாடவில்லை, அமெரிக்கா நம்பிக்கையுடனும், மரியாதையுடன் எங்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் நகர்வு குறித்து அவசரமாக ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கைவசம் செல்லலாம் என டொனால்டு டிரம்ப் அரசு கவலை கொண்டு உள்ளது என அந்நாட்டு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

0 comments: