Friday, 25 August 2017

'ஆட்சியை கலையுங்கள்!'- அதிர வைத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ பேட்டி

அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு இணைந்தன. இருப்பினும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்' என்று கூறி ஆளுநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.


இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில் சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ், 'புடம் போட்டத் தங்கமாக அ.தி.மு.க வரவேண்டும் என்றால் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும். மறுபடியும் நல்லாட்சி நடக்க ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வளவு சண்டைக்கு மத்தியிலும் குழப்பங்களுக்கு மத்தியிலும் ஆட்சி நடத்துவது சரியன்று. யாருடைய கட்டுப்பாட்டிலேயும் தற்போது அ.தி.மு.க என்கின்ற கட்சி இருப்பதாக தெரியவில்லை. பதவிச் சண்டைக்காகத் தான் இத்தனை சச்சரவுகளும் நடக்கிறது. மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. வேண்டுமென்றால், அம்மா ஆட்சி நடக்கிறது. நல்லாட்சி நடக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பதவி கொடுத்தால் எல்லாரும் வந்துவிடுவார்கள்' என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 

0 comments: