Tuesday, 22 August 2017

என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு இல்லை-வைத்தியலிங்கம் எம்பி.

சென்னை

அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து விட்டன. பன்னீர்செல்வம் அ.தி.மு.வின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல, அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா அந்தப் பதவியில் நீக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை முன்னிட்டு ஒரு அவசரப் பொதுக்குழு கூட உள்ளதாகவும், அந்தக் குழுவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி-யுமான வைத்திலிங்கம் கூறினார்.

இதை தொடர்ந்து  வைத்தியலிங்கத்தை கட்சியில்  இருந்து நீக்கி விட்டதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.

அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் வைத்தியலிங்கம் எம்.பி. நீக்கம் செய்யபட்டு உள்ளதாக  தினகரன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து வைத்தியலிங்கம் எம்.பி கூறியதாவது:-

என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு இல்லை. ஜெயலலிதாவால் நீக்கபட்டவர்தான் அவர்.  துணைபொது செயலாளர் பொறுப்பில் இருந்து ஏற்கனவே தினகரன் நீக்கப்பட்டு விட்டார். இன்னும் 2 -3 நாட்களில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள்.எங்களுக்கே 99.99 சதவீத தொண்டர்கள் ஆதரவு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: