* டிஎன்பிஎல் டி20 தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் நேற்று முன்தினம் இரவு மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணிக்கு முதல் பரிசாக ₹1 கோடி வழங்கப்பட்டது. டிஎன்பிஎல் கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர் சூப்பர் கில்லீஸ் அணியினர்.
* கரீபியன் பிரிமியர் லீக், இங்கிலாந்து கவுன்டி கிளப் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
* இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்ததால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு ரசிகர்கள், அணி வீரர்கள் பயணம் செய்த பேருந்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
* வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் - ஆஸ்திரேலியா இடையே பதுல்லாவில் நடக்க இருந்த 2 நாள் பயிற்சி ஆட்டம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கதேசம் - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் 27ம் தேதி மிர்பூரில் தொடங்குகிறது.
* தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜமைக்கா நட்சத்திரம் உசேன் போல்ட், நண்பர்களுடன் மதுபான விடுதிக்கு சென்று ₹5.81 லட்சம் செலவழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
* இலங்கை தொடருக்கான அணியில் புறக்கணிக்கப்பட்ட அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினம் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
* ‘ஏடிபி டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளதை நம்ப முடியவில்லை’ என்று ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் (31 வயது) கூறியுள்ளார். 2014, ஜூலைக்குப் பிறகு தற்போதுதான் அவர் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: