Friday, 1 September 2017

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறை விசாரணை நடத்த ஐ. நா. குழுவுக்கு மியான்மர் அரசு அனுமதி மறுப்பு

ரோஹிங்கியா முஸ்லிம்களின் மீது நடைபெறும் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த ஐ. நா விசாரணை குழுவுக்கு மியன்மர் அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போரட்டம் நடத்தி நோபல் பரிசு பெற்ற ஆன் சாங் சூச்சியின் தலைமையிலான அரசு நடந்து வருகிறது.

அதே மியன்மரில்தான் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையில் கடந்த வாரத்தில் மட்டும் 4000 பேர் கொல்லப்பட்டனர். 180,000க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மியான்மர் வன்முறை சம்பவங்களுக்கு ஆங் சாங் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவும் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கப்படும் வன்முறைகள் குறித்த விசாரணை நடத்த அனுமதி கேட்டிருந்தது. இந்த நிலையில் ஐ. நாவின் விசாரணை குழுவுக்கு அனுமதி வழங்க முடியாது என்று மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) மியான்மர் வெளியுறவுத் துறை செயலாளர் கவ்சியா கூறும்போது, அவர்கள் இங்கு உண்மையை கண்டறிவதற்காக அவர்களது குழுவை அனுப்புகிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் நாங்கள் அனுமதி அளிக்க மாட்டோம். மியான்மரில் நுழைவதற்கான விசாக்கள் ஊழியர்களுக்கோ பணியாளர்களுக்கோ வழங்கபடாது. இதுதான் உலகெங்கிலும் நாங்கள் பயன்படுத்தும் முறை. என்றார்.

0 comments: