Friday, 1 September 2017

பெண் டாக்டரின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர் கைது.!

பெண் டாக்டரின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர் கைது.

சென்னை தாம்பரத்தில் பேஸ்புக்கில் அறிமுகமான பெண் டாக்டரின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு மிரட்டிய பாப் பாடகரை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் பல் டாக்டர், இவருக்கு பேஸ்புக் மூலம் நிக்கில் ஜாட்டின் சர்மா என்ற பாப் பாடகர் அறிமுகமாகி இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், நிக்கில் ஜாட்டின் சர்மா நட்சத்திர ஓட்டல்களில் பாப் பாடலை பாடுவது இவரின் வேலையாகும். இவரின் அழகில் மயங்கிய பல் டாக்டர் காதலிக்க தொடங்கியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். நிக்கிலின் நடவடிக்கை பிடிக்காமல் சரிவர இல்லாததால் டாக்டர் அவரை விட்டு விலக தொடங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்து பெண் டாக்டரை பழி வாங்க திட்டமிட்ட நிக்கில், இருவரும் காதலித்த போது எடுத்த பெண் டாக்டரின் போட்டோவை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பாப் பாடகர் நிக்கில் ஜாட்டின் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

0 comments: