Saturday, 9 September 2017

ஒரு கோடியை தாண்டியது மெர்சலின் ஆளப்போறான் தமிழன்!!

விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வீடியோ புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

யு-டியூப்பில் கடந்த மாதம் 11ம் தேதி வெளியான அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலானது. வீடியோ வெளியாகி ஒரு மாதத்தைக் கடப்பதற்கு முன் தற்போதுவரை ஒருகோடியே ஒரு லட்சத்திற்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

மெர்சல் டீசர் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அந்த வீடியோ புதிய  மைல்கல்லை எட்டியுள்ளது. அட்லி இயக்கியுள்ள மெர்சல் படத்தில் விஜய் மூன்று பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளியில் ரிலீஸாக உள்ளது.

0 comments: