பெய்ஜிங்,
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது. இந்தியாவும் இங்கு படை வீரர்களை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே தொடர் பதட்டம் நிலவுவதால் கடந்த ஜூலை 8 ஆம் தேதி இந்தியா செல்லும் சீன மக்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், 2-வது முறையாக மீண்டும் தங்கள் நாட்டு பயணிகளுக்கு சீனா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன அரசு நாளிதழில் வெளியாகியுள்ள பயண எச்சரிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- “
இந்தியாவில் பயணம் செய்யும் சீனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் இயற்கை பேரிடர், சாலை விபத்து, தொற்றுநோய் ஆகியவை அதிகரித்துள்ளதால் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். இந்திய சட்ட விதிகளுக்கும் சீன நாட்டு பயணிகள் கண்டிப்பாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: