Friday, 1 September 2017

தமிழ்நாட்டில் விவேகம் படம் நஷ்டமா- விநியோகஸ்தர் பரபரப்பு பேட்டி!

நாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக கடந்த வியாழக்கிழமை 24ம் தேதி வெளியான படம் அஜித்தின் விவேகம். படத்தில் அஜித்தின் உழைப்பு,

தொழில்நுட்ப விஷயங்கள் என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. படமும் 4 நாட்களிலேயே ரூ. 100 கோடி வரை வசூலித்ததாக செய்திகள் எல்லாம் வந்தன.

தற்போது என்னவென்றால் அஜித்தின் விவேகம் படம் நஷ்டம் அளித்துள்ளதாக தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஸ்ரீதர் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், விவேகம் நல்ல படம் என்றாலும் வசூல் ரீதியாக லாபம் தரவில்லை. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு படத்தால் 40% முதல் 50% நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை அஜித் மற்றும் பட தயாரிப்பாளர்கள் ஈடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 comments: