Wednesday, 30 August 2017

3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை! ஜாதி வெறி பிணந்தின்னிகள்! வேடிக்கை பார்க்கும் வேடிக்கை உலகம்???

உலகில் மிகக்கொடூரமாக வேட்டையாடபடும் இனம் மியன்மார் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்!

மனித இனம் வேட்டையாடப்படும்
கொடுப்புலிகளும் , ஓநாய்களும் வாழும் தேசமாக மாறியுள்ளதை மியன்மார் படுகொலைகள் பறை சாட்டுகின்றன.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள்  என பாரபட்சம் இல்லாமல் கொடூர கொலைகள். அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய ஆன்சுங்கின் அரச பயங்கரவாத ராணுவ பயங்கரவாதிகளும் புத்த தீவிரவாதிகளும் சேர்ந்து  இந்த  இனப்படுகொலையை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். உலக நாடுகள் மௌனம் காத்து வருகிறது வேதனை.

பற்றி எரிகிறது பர்மாவில் முஸ்லிம் கிராமங்கள்!

பர்மாவில் நிலைகொண்டுள்ள கடும்போக்கு பெளத்த மதவாதிகளால் அங்குள்ள சிறுபான்மை மக்கள் அன்றாடம் அநுபவித்து வரும் துன்பங்கள், கொடுமைகள் சொல்லில் அடங்காதவை!

முஸ்லிம் கிராமங்கள் தேடி தேடி தீக்கிரையாக்க படுகின்றன.
பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்க படுகிறது!
காணுமிடமெல்லாம் முஸ்லிம்கள் கண்டதுண்டமாக வெட்டப்படுகிறார்கள்!
வெருண்டோடி வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் தடுத்து மறிக்கப்பட்டு சுட்டு பொசுக்கப்படுகிறார்கள்!

இந்நிலையில் மியான்மரையும் வங்கதேசத்தையும் பிரிக்கும் எல்லையாக நாஃப் நதி இருக்கிறது. இந்த நதிக்கரையில் தான் முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

மியான்மரிலிருந்து வரும் அகதிகளுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டானியோ கட்டாரஸ் வங்கதேசம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 1990-ம் ஆண்டு முதல் ராக்கைன் மாநிலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருகிறது. ஏற்கனவே வங்கதேசத்தில் 4 லட்சம் ரோஹிங்கிய இஸ்லாமிய மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதனிடையே, மியான்மரில் 2,000 முதல் 3,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக The European Rohingya Council தெரிவித்துள்ளது. இன அழிப்பை தடுக்க உலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது. “மெதுவாக எரிக்கப்படும் இனப்படுகொலை” என மியான்மர் இன அழிப்பை அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், மியான்மர் ராணுவத்தின் கைகளே இந்த இனப்படுகொலையில் அதிகம் எனவும் The European Rohingya Council தெரிவித்துள்ளது.

0 comments: