முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை 40 சட்டமன்ற உறுப்பினா்கள் புற்க்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.வின் ஆலோசனை கூட்டம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது, கட்சியின் பொதுக் குழுவை விரைவில் கூட்டுவது உள்ளிட்ட 4 முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். 1.30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க.வில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு தரப்பு சட்டமன்ற உறுப்பினா்களான 22 போ் வரவில்லை. அழைப்பு விடுக்காத காரணத்தால் ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்று தினகரன் ஆதரவு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் புகாா் தொிவித்தனா்.
இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிசாமி ஆதரவு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் பலரும் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தொிகிறது. ஏற குறைய 40 எம்.எல்.ஏ.க்கள் இந்த ஆலோசனை கூட்டத்த புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
0 comments: