Monday, 21 August 2017

ஸ்பெயின் தாக்குதல் வேன் ஓட்டிய தீவிரவாதி சுட்டுக் கொலை

பார்சிலோனா : ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த 17ம் தேதி சுற்றுலா தலமான லாஸ் ராம்பிளாஸ் பகுதியில் வேனை தாறுமாறாக ஓட்டிய தீவிரவாதிகள், பொதுமக்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினர். இதில், 13 பேர் பலியாயினர். 100 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், வேனை ஓட்டியவரை போலீசார் நேற்று சுட்டுக் கொன்றனர்.  அவரது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக நேற்று டிவிட்டரில் தகவல் வெளியிட்ட கேடலோனியா போலீசார், தீவிரவாதியின் பெயரை வெளியிடவில்லை. 


0 comments: