டெல்லி: முஸ்லீம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக் முறைக்கு உச்சநீமன்றம் இடைகாலத்தடை விதித்துள்ளது. மூன்று முறை தலாக் கூறி இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் முத்தலாக் முறை செல்லாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. மேலும் இவ்வவிகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மதம் தொடர்பான விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேறு சட்டம் இயற்றினாலோ அல்லது முத்தலாக்கிற்கு தடை விதித்தாலோ மட்டும் தான் இவ்விககாரத்தில் நிரந்தர தடை என்ற நிலை உருவாகும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இவ்விகாரத்தில் மத்திய அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே நாடாளுமன்றத்தில் உரிய சட்டம் இயற்றும் வரை முத்தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்வதற்கு 6 மாத காலம் தடை விதிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய அரசு சட்டம் இயற்றும் வரை உச்சநீதிமன்றத்தால் இந்த விவகாரத்தில் நிரந்தர தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். முஸ்லீம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக் விவகாரத்தில் டெல்லி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் கூறும் முத்தலாக் முறை நடைமுறையில் உள்ளது.இதனைத் தவறாக பயன்படுத்தி சிலர் விவாகரத்து செய்வதால், அப்பாவி பெண்கள், குழந்தைகளுடன் பாதிக்கப்பட்டு தவித்து வருவதாகவும், இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. இதில் 5 ரிட் மனுக்களை இஸ்லாமிய பெண் ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.
மனுக்களை கடந்த மார்ச் 30-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவித்தது. முத்தலாக் முறை இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றுதானா, முத்தலாக் வழங்கப்படுவதில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து ஆராயப்படுமென நீதிமன்றம் தெரிவித்தது.அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், நாரிமன், யூ.யூ. லலித், அப்துல் நசீர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.இதில், அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் வாரியம், அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் மத்திய அரசின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. முத்தலாக் என்ற முறையை தவறாக பயன்படுத்தி ஸ்கைஃப், வாட்ஸ் அப் மூலம் தலாக் சொல்லி விவாகரத்து அளிப்பதாக பெண்கள் அமைப்பினர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு முறையிடப்பட்டது.முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.விசாரணை முடிந்து கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் முத்தலாக்கிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: