Tuesday, 22 August 2017

உடனே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள்! - ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் மூலம் தெரிவித்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டுமென்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்த 22 எம்.எல்.ஏ-க்கள் இன்று உங்களிடம் கடிதம் மூலம் அதைத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது தெரிகிறது. இதனால், தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பலத்தை நிரூபிக்க உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி ஜனநாயக மாண்பை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்தினால், அது முன்னர் நடந்தது போன்ற குதிரை பேரத்துக்கு மீண்டும் வழி வகுக்கும். எனவே நான், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சட்டசபையில் உடனடியாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments: