Friday, 25 August 2017

ஹரியானா, பஞ்சாபில் கலவரம்.. அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலவரம் குறித்து தேசிய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
கலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தனக்கு மிகுந்த மன வேதனை தருவதாக மோடி கூறியுள்ளார்.
கலவரப் பகுதிகளில்
அதிகாரிகள் தொடர்ந்து பணி செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் டிவிட்டரில் கூறியுள்ளார்.

0 comments: