Friday, 25 August 2017

முதலமைச்சர் எல்லை தாண்டுகிறார் - நாஞ்சில் சம்பத் அறைக்கூவல்...!!!

காவல்துறை கையில் இருக்கிற அதிகார திமிரில் முதலமைச்சர் எடப்பாடி எல்லை தாண்டுகிறார் எனவும், எம்.எல்.ஏக்கள் வீட்டில் அச்சுறுத்தும் வகையில் வன்முறைக்கு வாசல் திறந்து வைக்கிறார்கள் எனவும் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். 
புதுச்சேரி  கடற்கரையை ஒட்டியுள்ள சின்னவீராம்பட்டினம் அருகே உள்ள தி விண்ட் பிளவர் என்ற ஆடம்பர சொகுசு ரிசார்ட்டில் கடந்த 4 நாட்களாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
அந்த விடுதியில்  18 எம்எல்ஏக்களும்  வாக்கிங், ஜாக்கிங், விளையாட்டு, மசாஜ், வகை, வகையான உணவுகள் என சகல வசதிகளுடனுடன் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், அந்த ரிசார்ட்டில் முன்பதிவு செய்த காலம் இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைவதால் எம்.எல்ஏ.,க்கள் அனைவரும் இன்று வேறு ரிசார்ட்டிற்கு மாற்றப்பட உள்ளனர். 
இதனிடையே 19 எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க எடப்பாடி முயற்ச்சி செய்து வருகிறார்.  
இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த டிடிவி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், காவல்துறை கையில் இருக்கிற அதிகார திமிரில் முதலமைச்சர் எடப்பாடி எல்லை தாண்டுகிறார் எனவும், எம்.எல்.ஏக்கள் வீட்டில் அச்சுறுத்தும் வகையில் வன்முறைக்கு வாசல் திறந்து வைக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 
பழிக்கு பழி வாங்கும் டிடிவி அகராதிகளில் இல்லை எனவும், வைத்தியலிங்கத்திற்கு பதிலாக தஞ்சை மாவட்ட செயலாளராக சேகர் மாற்றம் செய்யப்பட்டதற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 
மேலும் தஞ்சையில் சேகர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளித்த தஞ்சை எஸ் பி இடமாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கதக்கது எனவும் குறிப்பிட்டார். 

0 comments: