விஜய்யின் மெர்சல் படத்திற்கு நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கே பிரம்மாண்டத்தை காட்டிய படக்குழு படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்களுக்கு பெரிய ஆர்வம்.
அக்டோபர் மாதம் படம் ரிலீஸ் என்று கூறப்படும் நிலையில், சென்னையில் இப்படத்தை பிரபல விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளரும், தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
ஆனால் உண்மையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே மெர்சல் படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யவுள்ளனர்.
0 comments: