பாட்னா,
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக ‘தேஷ் பச்சாவ் பிஜேபி பகாவ்’ (பாஜகவை துரத்துங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்) என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டம் பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணமூல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பீகாரில் மகா கூட்டணி ஆட்சியில் இருந்த போதுதான் கூட்டத்திற்கு லாலு ஏற்பாடு செய்தார், ஆனால் ஜுலை 26-ம் தேதி கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்துவிட்டார். பீகாரில் வெள்ளம் காரணமாக கூட்டத்தை தள்ளிப்போடுமாறு கோரிக்கை லாலுவிற்கு முன்வைக்கப்பட்டது, ஆனால் நிராகரித்துவிட்டார். இதனையடுத்தும் எதிர்க்கட்சிகள் வரிசையில் கூட்டத்தில் கலந்து கொள்வோர்கள் பட்டியல் தலைவர்களில் ஒவ்வொருவரும் பின்வாங்கும் நிலையானது காணப்பட்டது.
இன்று திட்டமிட்டப்படி கூட்டமாணது தொடங்கி உள்ளது. காந்தி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்து உள்ளனர். மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், குலாம் நபி ஆசாத், சரத் யாதவ், ஜக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த கட்சி தலைவர்கள், குலாம் நபி ஆசாத் உள்பட பல முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். கூட்டத்தில் தொண்டர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கூடியதால் பாட்னா நகரமே குலுங்கும் நிலையே காணப்படுகிறது. இது எதிர்க்கட்சியினரை மிகவும் மகிழ்ச்சியடைய செய்து உள்ளது. பின்வாங்கிய தலைவர்களும் முன்செல்வார்கள் என கூறப்படுகிறது.
2019 பாராளுமன்ற தேர்தலை நோக்கி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் லாலுவின் முதல்கட்ட நகர்வாக பார்க்கப்படும் இந்த கூட்டத்தில் தொண்டர்கள் குவிந்து உள்ளது, ஊக்கமளிப்பதாகவும் பார்க்கப்படுகிறது. பாட்னா முழுவதும் பச்சை நிறமாகவே காட்சியளிக்கிறது. கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ள தலைவர்கள் பாரதீய ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்திற்கு. காந்தி மைதானத்தில் 64 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
0 comments: