Wednesday, 30 August 2017

தற்போதுள்ள அரசியலை மாற்றவேண்டியது நம் கடமை - கமல்

கோவையில் நடைப்பெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட கமல் தற்போதைய அரசியல் குறித்து பேசினார்.

கமல் பேசியதாவது :
இது திருமண விழா அல்ல, இது ஒரு ஆரம்ப விழா என கமல் கூறியுள்ளார். கமல் அரசியல் பிரவேசம் செய்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ஆரம்ப விழா என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள அரசியல் சூழலை இப்படியே விட்டு வைக்காமல், அதனை மாற்ற வேண்டியது நமது கடமை. ஓட்டுக்காக பணத்தை பெற்றுக்கொண்டு திருடர்களை ஆட்சி செய்ய அனுமதித்துவிட்டோம்.

மக்களுக்கான நல்ல அரசாக மாற்றவேண்டியது நமது கடமை என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

0 comments: