Wednesday, 30 August 2017

சேலத்தின் முதல் பெண் ஆட்சியருக்கு குவிகிறது பாராட்டு ..! தரையில் அமர்ந்து கோரிக்கைகளை கேட்கும் சேலம் ஆட்சியர்..!

சேலம்;
ஆட்சி  அதிகாரம் மிக்க  ஒரு இளம்  பெண்  மக்களிடையே  நல்ல  வரவேற்பை  பெற்றுள்ளார்  என்றால்  அவருடைய  நடத்தை  எப்படி இருக்கும்  என்று நினைத்து பாருங்கள்

கடந்த சில  தினங்களுக்கு முன்பு, சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றுக் கொண்டரோஹிணி தாம் பதவியேற்ற நாள் முதலே  அவருடைய  நடத்தையில் அவ்வளவு  எளிமையாக   உள்ளார்

சேலம் மாவட்டத்தின் முதல் பெண்  ஆட்சியர் என்றால் அந்த பெருமை ரோஹினிக்கு தான்.

1970ஆம் ஆண்டு முதல் கணக்கிடும் போது,  இதுவரை சேலத்தை ஆண்ட 170 ஆட்சியர்களில், முதல்  பெண்  ஆட்சியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்  மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் விவசாயியின் மகளாக பிறந்தவர். அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பு, அரசுக்கல்லூரியில் பொறியியல் பட்டம்  முடித்தவர்.

இவருடைய  தனி சிறப்பு  என்ன  தெரியுமா?

இவர்  ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக  எந்த சிறப்பு வகுப்பும் செல்லாதவர்  என்பது  எத்தனை பேருக்கு  தெரியும்

மதுரை தமிழ்

பிறந்தது வேறு மாநிலமாக இருந்தாலும் , தமிழ் நாட்டில்  கடந்த 9 வருடங்களாக  மதுரை   தமிழில் உரையாடி  மக்கள்  மனதை  வென்றவர்  தான் ரோஹினி.

ரோஹினியின் எளிமை

மக்களின்  குறைகளை  கேட்கும் போது அவர்களுக்கு  முக்கியத்துவம்  அளித்து  தமிழில்  உரையாடி, அதிக நேரம் அவர்களுக்காக  காது  கொடுத்து கேட்கும்  சிறந்த ஆட்சியராக  வலம் வருகிறார் ரோஹினி.

மேலும் மாற்று  திறனாளிகளுக்கு முக்கியத்தும்  கொடுக்கும் வகையில், அவர்களுடன்  தரையில் அமர்ந்து  உரையாடும்  இந்த  இயல்பு  மக்களை  வெகுவாக கவர்ந்துள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

0 comments: