ஜெயா டிவி வாசலில் முடிந்தால் கால் வைத்து பாருங்கள். முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த நாஞ்சில் சம்பத்.
சென்னையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நியமனம் செல்லாது, தினகரன் அறிவிக்கும் எந்த முடிவுகள் கட்சியை கட்டுப்படுத்தாது.
ஜெய டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழை அதிமுகவே ஏற்று நடத்தும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் கூறியதாவது: ஒரு தனியார் சொத்துக்களை எப்படி அரசுடையாக்க முடியும். அவர்கள் கொண்டு வந்துள்ள தீர்மானம் மிகவும் மோசமானது.
தனியார் சொத்துக்களை எப்படி ஒரு அரசு கைப்பற்ற முடியும். அதே நேரத்தில் ஜெய டிவி வாசலில் முடிந்தால் கால் வைத்து பார்க்கட்டும்.
அப்புறம் நடக்கிறது என்ன என்று அவர்களுக்கு தெரியும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு 420 என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
0 comments: