சமீபத்தில் மிகவும் பாசிட்டிவான விமர்சனங்களை சந்தித்த ஒரு படம் தரமணி. அஞ்சலி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது.
ஒரு பக்கம் ஜெய் அஞ்சலி காதல் போய்க்கொண்டிருக்கிறது. இவர்களின் திருமணம் எப்போது என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இணைந்து நடித்துள்ள பலூன் படம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
தற்போது அஞ்சலி மலையாளத்தில் ரோசாப்பூ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 23 ஆம் தேதி எர்ணாகுளத்தில் ஆரம்பமாகியுள்ளது. இவரின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்குமாம். மேலும் மலையாளத்தில் அவர் எண்ட்ரி கொடுக்கும் முதல் படமும் இதுவே.

0 comments: