தேர்தலின் போது சசிகலாவின் புகைப்படத்தையோ பெயரையோ பயன்படுத்தாத டிடிவி தினகரன் அணி தற்போது மீண்டும் சசிகலாவின் புகைப்படத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருடைய இடத்திற்கு சசிகலா வர திட்டமிட்டார். அதன்படி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் திறம்பட செயல்பட்டதை கண்டு வியந்த சசிகலா பதவி ஆசையில் அவசர அவசரமாக பன்னீரை பதவி விலக கோரி வற்புறுத்தியுள்ளார். அதன்படி அவரும் பதவி விலகினார்.
ஆனாலும் சசிகலாவால் முதல்வராக பதவி ஏற்க முடியவில்லை. காரணம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சொத்து குவிப்பு வழக்கு அவர் கால்களை வாறிவிட்டது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் கட்சி பொறுப்புகளையும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும் கவனித்து வந்தனர்.
தனது சின்னம்மாவிற்கு வந்த அதே பதவி ஆசை டிடிவி தினகரனுக்கும் தொற்றிக்கொண்டது. இதனால் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
அதற்காக முன்னனி நிர்வாகிகள் கூறியதை கூட மறுத்துவிட்டு ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டார்.
அப்போது, சசிகலா பெயரையோ, புகைப்படத்தையோ அவர்கள் உபயோகப்படுத்தவில்லை. மேலும் பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குவதாக டிடிவி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதைதொடர்ந்து டிடிவியை ஒதுக்கிவிட்டு ஒபிஎஸ்சை இணைப்பதாக எடப்பாடி குழு முடிவு செய்து அறிவித்தது. அந்தவகையில் தற்போது, ஒபிஎஸ் இணைந்த நிலையில், சசிகலாவையும் நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் எடப்பாடி அணியினர்.
இந்நிலையில், முழுக்க நினைந்த பிறகு முக்காடு எதற்கு என்பதுபோல் டிடிவி தினகரன் சசிகலாவை தொடர்ந்து ஆதரித்து தனி அணிகளை உருவாக்கி வருகிறார்.
அதன்படி தற்போது என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற தோரணையில், பேனர் மற்றும் போஸ்டரில் மீண்டும் சசிகலாவின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்று வருகிறது.
0 comments: