மராட்டிய மாநிலம் மகாவலா வாசாட் பகுதி டரராணி சவுக்கை சேர்ந்தவர் சுனில் குச்சக்கர்னி, (வயது 27) கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இருந்தாலும் சுனிலின் மனைவி 3 குழந்தைகளுடன் அவரின் தாயார் யெலவா (வயது 65) வீட்டில் வசித்து வருகிறார். சுனில் தாயாருடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று அதிக போதையில் பசியுடன் சுனில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் சுனிலுக்கும், தாயார் யெலவாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த சுனில் தாயை கொலை செய்து அவரது இதயத்து எடுத்து பெப்பர் தெளித்து சாப்பிட்டு உள்ளார்.
கையில் ரத்தம் சொட்ட சொட்ட சுனில் வெளியே வந்த போது, அதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுனிலை கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சுனில் கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று போதையில் வந்த வீட்டில் தாயாருடன் சண்டை போட்டு உள்ளார். அதில் கோபமடைந்த சுனில், தாயை அடித்து கொன்றுள்ளார். பின்னர், அவர் தனது தாயின் இதயத்தை எடுத்து ஒரு தட்டில் வைத்தார்.
பின்னர் வீட்டில் இருந்த சட்னி மற்றும் மிளகு பொடியை தூவி உள்ளார். பின்னர் அதன் ஒரு பகுதியை சாப்பிட்டு உள்ளார் என சந்தேகம் அடைந்து உள்ளோம். அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் கூறி உள்ளனர்.
0 comments: