திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 4ம் வகுப்பு மாணவியை, 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை அருகேயுள்ள கிராமம் ஒன்றினைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, தனது மனைவியுடன் கட்டடத் தொழில் செய்ய திருச்சி சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன், இவர்களது வீட்டில் தனியாக இருந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து வந்த பெற்றோர், சிறுமி காயமடைந்துள்ளதை அறிந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வாசுகி, மாணவன் படிக்கும் பள்ளிக்கு சென்று மாணவனை விசாரித்துள்ளார். அப்போது, மாணவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 17 வயது மாணவனை கைது செய்த போலீசார், அவனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
0 comments: