அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் 2-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, சென்னை லொயோலா கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வகுப்புகளைப் புறக்கணித்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் புதுக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி மைதானத்தில் திரண்ட அவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதே போல், நந்தனம், அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும் அவர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
0 comments: