சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே நேரடியாக நடத்த வேண்டுமென பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு, அதன் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளும் அரசுடைமையாக்கப்பட்டபோதும், அதன் பயன்கள் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், தனியார்வசம் இருந்தபோது வசூலிக்கப்பட்ட கட்டணமே தற்போது வசூலிக்கப்படுவதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
போராட்டம் நடத்தும் மாணவர்களை அழைத்துப் பேசாமல், அவர்களது கல்லூரிகளுக்கும், விடுதிகளுக்கும் விடுமுறை அளித்து கட்டாயமாக வெளியேற்றியிருப்பதாக அவர் சாடியுள்ளார். எனவே, அரசின் கட்டணத்தையே வசூலிக்கும்வகையில், அண்ணாமலை பல்கலைக்கழக சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
0 comments: