Tuesday, 5 September 2017

துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்கும்போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட 8 வயது சிறுவன்



உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுவன் துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்கும்போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டான்.
காசியாபாத் பகுதியைச் சேர்ந்த ஜுனாயித் என்ற 8 வயது சிறுவன் துப்பாக்கியை கையில் பிடித்தவாறு நண்பர்களுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளான், அப்போது தவறுதலாக துப்பாக்கி விசையை அழுத்தியதால் குண்டு அவன் தலையில் பாய்ந்துள்ளது. உடனடியாக சிறுவன் டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத துப்பாக்கியை சிறுவனின் பக்கத்து வீட்டுக்காரர் வைத்திருந்தது தெரியவந்ததால் காளி என்ற அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 comments: