Tuesday, 5 September 2017

முத்துப்பேட்டை அரசு பள்ளியின் அவல நிலை கவனத்தில் எடுத்துகொள்ளுமா பேரூராட்சி??

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை;

புதிய பஸ்டாண்ட் அருகில் ஆசாத்நகரில் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் நூற்றுக்கு மேற்ப்பட்ட மாணவர்கள் ஆலங்காடு,ஆசாத்நகர்,ரஹ்மத்நகர்,இப்படி சுற்று வட்டாரத்தில் இருந்து மாணவர்கள் மாணவிகள் பயிற்று வருகிறார்கள்.

இந்த பள்ளிக்கு அருகில் குப்பை மேடுகளும், சாக்கடை கழிவுகளும்,பற்றாக்குறைக்கு சுற்றுசுவர் இல்லாததால் ஆடு மாடு பன்றிகளும் வந்து செல்வது வாடிக்கை.

இரவு நேரங்களில் இன்னும் மோசாமாம் திறந்து கிடப்பதால் சில சமுக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி செல்வதும் மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்துவிட்டு செல்வதும் பள்ளியில் இருக்கும் மேஜை நாற்காலி பிரோ இப்படி எதையும் விடுவதில்லையாம்.

இது குறித்து காவல் துறையிடம் புகாரும் கொடுக்கப்பட்டதாக ஆசிரியர் கூறினார்.

காலையில் போய் பார்த்தா தான் தெரியும் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் தினமும் மண இறுக்கத்துடன் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் ஆசாத்நகர் குழந்தைகள் வருவதற்கு சிரமாக இருப்பதால் அந்த வசதியை தன் புத்தியைகொண்டு பள்ளி மாணவர்களே டயர் பாலம் செய்துகாட்டி இருக்கிறார்கள் பலராலும் பாராட்டபடுகிறது.

பள்ளியில் மாணவர்களும் சரி ஆசியர்களும் சரி திறமையானவர்ளே..இப்படி பட்ட பள்ளிக்கு நிறைய சோதனைகள் இருக்கு.

இந்த குறைகளினால் பள்ளியில் புதிய சேர்க்கை பாதிப்படைகிறது என்பது பள்ளியில் பயிலும் பொற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்து.

இந்த வசதிகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூர்த்திசெய்து கொடுத்தால்  உண்மையில் அந்த பள்ளி தமிழகத்திற்கே எடுத்துகாட்டாக திகழும் என்பது சந்தேகமே இல்லை..

தேவைகளை பூர்த்திசெய்யுமா?? முத்துப்பேட்டை பேரூராட்சி பொருத்திருந்து பார்ப்போம்!!

0 comments: