Tuesday, 5 September 2017

அதிரை பேரூராட்சியின் மெத்தனம்..தெருக்களில் திரும்பிய பக்கம் எல்லாம் குப்பை!

தஞ்சாவூர் மாவட்டம்;
அதிராம்பட்டிணத்தில் தெருக்களில் தூய்மை கேடு அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பா ஆசாத்நகர்,போஸ்ட் ஆபிஸ்தெரு,வண்டிப்பேட்டை,மேலத்தெரு,இப்படி தெருக்களில் பாராமரிப்பு மோசமான நிலையில் இருக்கிறது.

இது பற்றி தெருவாசிகள் சொன்னது என்ன பண்றது குப்பை கொட்டினா அதை அப்புறப்படுத்த ஒரு வாரம் ஆகுது 
ஒரு டிராக்டர்தான் இருந்தது இப்போதான் இன்னோரு டிராக்டர் வந்ததாம் பேரூராட்சிக்கு.

இவ்ளோ பெரிய ஊருக்கு இரண்டு டிராக்டர்தானா??
குப்பைகளை கிடப்பில் போட்டு அள்ளுவதால் அள்ள முடியாமல் போகுது மழை பெய்துவிட்டால் அறவே அள்ளமுடிவதில்லை.

ஆகவே அதிரை பேரூராட்சி (அ)ஊராட்சி கவணத்தில் கொண்டு குப்பைகளை கொட்ட பிளாஸ்டிக் கேன்கள் வைக்க வேண்டும் தினமும் குப்பைகளை அகற்றவேண்டும் டிராக்டர் மேலும் 3வாங்கி எல்லாத்தெருக்களையும் சுத்தமாக வைக்க வேண்டும் என்பது அதிரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒரு சிலர் போராட்டம் நடத்தலாம் என்றும் பேசி கொண்டார்கள் ஆகவே கவணத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்ச்சி எடுத்தால் அதிரை மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

0 comments: