Sunday, 3 September 2017

வடகொரியாவுக்கு ராணுவ ரீதியில் பெரிய பதிலடி - அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியா அமெரிக்காவுக்கோ, அதன் நட்பு நாடுகளுக்கோ அச்சுறுத்தல் விடுத்தால் ராணுவ ரீதியில் பெரிய அளவிலான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மெட்டிஸ் எச்சரித்துள்ளார். அதிபர் டோனல்ட் டிரம்ப்புடனான சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பியோங்யாங்கின் அச்சுறுத்தல் தொடர்பில், ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் ஏகமனதாக இணக்கம் கண்டுள்ளது.

கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதமற்ற வட்டாரமாக மாற்ற அது கடப்பாடு கொண்டிருக்கிறது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார் திரு. மட்டிஸ்.

வடகொரியாவை முற்றிலுமாக அழிப்பது மன்றத்தின் நோக்கமல்ல; இருப்பினும் அவ்வாறு செய்வதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் எச்சரித்தார்.

0 comments: