நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வழக்கறிஞர் சேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திவரும்
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜாக்டோ ஜியோ செயலாளர் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலைலையில் இன்று சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில், நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செப். 12 ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்திலும், செப். 13 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதில் 7 லட்சத்திற்கு மேல் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: