பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஹரியானா சிபிஐ நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
தேரா சச்சா சௌதா ஆன்மிக அமைப்பின் தலைவராகத் திகழும் ராம் ரஹீம் சிங், 15 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 25 ஆம் தேதி ஹரியானா சிபிஐ நீதிமன்றத்திற்கு விசாரனைக்கு வந்தது. அப்போது, ராம் ரஹீம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றாலும், தண்டனை குறித்த விவரங்கள் வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று தீர்ப்பு வெளியானதையடுத்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் துணை ராணுவம் மற்றும் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள சாமியார் குர்தீப் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
மேலும்,சாமியார் குர்மீத்துக்கு தண்டனை அறிவித்ததை அடுத்து சிரிசாவில் வன்முறை வெடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த வெள்ளிகிழமையன்று ஏற்பட்ட கலவரத்தில் 38 பேர் பரிதாம்பமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
ராம் ரஹீமுக்கு வழங்கப்பட்ட தண்டணையை அடுத்து ஹரியானாவில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தடுப்பதற்காக ஹரியானாவில் பல்வேறு இடங்களில் 144தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது
குற்றவாளி ராம் ரஹீம் மருத்துவ பரிசோதனைக்கு பின் கைதிக்கான சீருடை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது .
பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவது என்ன ?
பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தாலும் அது ஏற்புடையது அல்ல என்றும், அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள்தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 2 பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 comments: