Thursday, 31 August 2017

மும்பை: 3 மாடிக் கட்டடம் விழுந்து விபத்து; 6 பலி

மும்பையில் உள்ள ஜே.ஜே. சந்திப்பு அருகே 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை இந்த விபத்தில் 30 - 35 பேர் சிக்கி உள்ளனர்.

மேலும் ஆறு பேர் மரணமடைந்துள்ள தாக தகவல் வெளிவந்துள்ளது. விபத்து  ஏற்ப்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவரமாக ஈடுபட்டுள்ளனர். 

பாக்மோடியா தெருவில் உள்ள ஜே.ஜே. ஜங்ஷன் அருகே இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் இன்று காலை 8:30 மணிக்கு நடைபெற்றது. இதுவரை மூன்று நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.ஆர்.டி.எஃப்) குழு மற்றும் ஆம்புலன்ஸ் பிந்தி பஜார் கட்டட சரிவுத் தளத்தை அடைந்தது.

இந்த கட்டடம் 70 ஆண்டு பழமை வாய்ந்தது. குறைந்த பட்சம் 10 குடும்பங்கள் அந்த கட்டிடத்தில் வாழ்ந்து வந்தனர்.

மும்பையில் கடந்த 2 தினங்கள் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று பெய்த மழையில் சுமார் 14  பேர் மரணமடைந்தனர். 

பட உரவி ANI

0 comments: