Thursday, 31 August 2017

கோட்டையை விட்டவர் கமல்ஹாசன் – தமிழிசை நக்கல்.

கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டையை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இதற்கு சினிமாவை கோட்டை விட்டபின் வேறு என்ன கோட்டை கட்ட போகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழக அரசியலையும், அரசியல் தலைவர்களையும் விமர்சித்து வருகிறார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் தமிழக அரசின் நிலையை பலமுறை கேலி செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டையை நோக்கிய பயணத்தை தொடங்கி விட்டதாகவும். அனைவரும் பயணத்துக்கு ஆயத்தமாகும் படியும் கூறியிருந்தார்.
ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். இதனை இப்படியே விட்டு வைக்க கூடாது.

தமிழக அரசியல் சூழலை மாற்ற வேண்டியது நமது கடமை. இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுங்கள் என்றும் கமல் ஆதங்கத்தில் பேசினார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை, சினிமாவை கோட்டை விட்ட பின் வேறு என்ன கோட்டைதான் கட்ட எனவும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments: