Monday, 28 August 2017

ஒருவேளை அந்த வெடிகுண்டு வெடித்திருந்தால்.? அந்த 400 குழந்தைகளின் நிலை என்ன.?

400 பள்ளிக்குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றுவதற்காக தனது தோள் மீது 12 இன்ச் அளவிலான, 10 கிலோ வெடிகுண்டை தூக்கிக்கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிக்கொண்டுபோய் எறிந்த அபிஷேக் படேல் தான் தற்போதைய சோஷியல் மீடியா வைரல்.!





மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ள ரூ.50,000 பரிசுத்தொகையை விட அதிக புகழை சம்பாதித்துவிட்ட ஹெட் கான்ஸ்டபிள் அபிஷேக் படேல் ஒருவேளை அந்த வெடிகுண்டு தேடலுக்கு போகாமல் இருந்திருந்தாலோ அல்லது அவரின் கைகளுக்கு சரியான நேரத்தில் அந்த 10கிலோ எடையுள்ள வெடிகுண்டு கிடைக்காமல் போயிருந்தாலோ என்னவாகியிருக்கும்.?


கண்ணாடி பாட்டில் வடிவமைப்பு கூட கொண்டிருக்கலாம்

ஒரு வெடிகுண்டு என்பது வெடித்துச்சிதறும் கூறுகளை உள்ளடக்கிய ஒரு கேஸ் (Case) அல்லது ஒரு ஷெல் (Shell) ஆகும். இந்த ஷெல் ஆனது ஒரு எஃகு சுவர் கொண்ட ஆர்ட்டிலேரி முதல் ஒரு கண்ணாடி பாட்டில் வடிவமைப்பு கொண்டிருக்கலாம் அல்லது சீல் செய்து அடைக்கப்பட்ட ஈயத்தினால் ஆன ஒரு குழாய் என எந்தவொரு வடிவமைப்பிலும் இருக்கலாம்.

உள்ளே திணிக்கப்பட்ட வெடிப்பு பொருளானது

உள்ளே திணிக்கப்பட்ட வெடிப்பு பொருளானது

ஒரு வெடிகுண்டானது பார்ப்பதற்கு ஒரு காப்பி டின் அல்லது ஒரு ஆட்டோமொபைல் போல மிகவும் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அது வெடித்து வெளிப்புறமாகச் சிதறும் போது, அதன் ஒவ்வொரு ஷெல்லும் கொடூரமான ஏவுகணையாய் செயல்படும். வெடிகுண்டு ஷெல்லின் உள்ளே திணிக்கப்பட்ட வெடிப்பு பொருளானது டிஎன்டி (TNT) அல்லது செம்டெக்ஸ் (Semtex) என எந்தவொரு உயர்வகை வெடிப்புபொருளாகவும் இருக்க முடியும்.

5 வழிகளில் சேதம்

5 வழிகளில் சேதம்

ஒரு குண்டு வெடிப்பானது அதன் தாக்கத்தை பொறுத்து பல வழிகளில் சேதத்தை ஏற்படுத்தும். அதாவது பிளாஸ்ட் வேவ்ஸ் எனப்படும் வெடிப்பு அலைகள், ஷாக் வேவ்ஸ் எனப்படும் அதிர்ச்சி அலைகள், பிரக்மென்டஷின் எனப்படும் துண்டு துண்டாக சிதறுவது, தீ மற்றும் வெப்பம் மற்றும் குண்டு பிளாஸ்ட் விண்ட் எனப்படும் வெடிப்புக்காற்று என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

பிளாஸ்ட் வேவ்ஸ் எனப்படும் வெடிப்பு அலைகள்

பிளாஸ்ட் வேவ்ஸ் எனப்படும் வெடிப்பு அலைகள்

ஒரு குண்டு வெடிக்கும் போது, வெடிப்பை சுற்றியுள்ள பகுதி அதிகப்படியான அழுத்தத்தை சந்திக்கும். அதன் விளைவாக, ஒலியின் வேகத்தை விட விரைவாக பயணம் செய்யும் மிகவும் சுருக்கப்பட்ட காற்று துகள்கள் உருவாகும். மில்லி விநாடிகளுக்கு மட்டுமே இருக்கும் இந்த ஆரம்ப குண்டு வெடிப்பு அலையானது மிகவும் மோசமான சேதங்களை விளைவிக்க போதுமானதாக இருக்கும்.

நபரை அடையும் நொடியில் இரண்டு விடயங்கள் நடக்கும்

நபரை அடையும் நொடியில் இரண்டு விடயங்கள் நடக்கும்

இந்தக் குண்டு வெடிப்பு ஒரு கட்டமைப்பு அல்லது நபரை அடையும் நொடியில் இரண்டு விடயங்கள் நடக்கும். முதலாவதாக, குண்டு வெடிப்பின் சக்தி உணரப்படும், இது ஷாக்வேவ்ஸ் எனப்படும் அதிர்ச்சி அலைகளின் முதன்மை மற்றும் ஆரம்ப தாக்கமாகும். பின்னர் அந்த தாக்கம் குறிப்பிட்ட கட்டமைப்பு அல்லது நபரின் உடலை சேதப்படுத்தும்.

உறுப்புகளையும், திசுக்களையும் கடந்து செல்லும்

உறுப்புகளையும், திசுக்களையும் கடந்து செல்லும் ஒரு மேற்பரப்பு அல்லது ஒரு உடல் தாக்குதலைத் தொடர்ந்து உயர்-வேக அதிர்ச்சியானது தொடர்ந்து செல்லும். அதாவது, அவைகள் உடலில் உள்ள உறுப்புகளையும், திசுக்களையும் கடந்து செல்லும். அந்த அலைகள் வழியெல்லாம் ஆற்றலை கொண்டு செல்லும். அவைகள் சூப்பர்சோனிக் மற்றும் ஒலி அலைகளை விட அதிக ஆற்றல் போக்குவரத்து கொண்ட அலைகளாகும். 

அழிவுகரமான விளைவுகளை அதிகரிக்கலாம் இம்மாதிரியான அலைகள் கடந்து செல்வதை தடுக்கும் அளவிலான பாதுகாப்பான ஆடைகள் ஏதும் நம்மிடம் இல்லை என்பது ஒருபக்கமிருக்க, சில சந்தர்ப்பங்களில் அதை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட அழிவுகரமான விளைவுகளை அதிகரிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மக்களை தாக்கும், துளைக்கும். ஒரு வெடிகுண்டு வெடிக்கும் போது வெடிப்பொருளை உள்ளடக்கியுள்ள கேஸ்/ஷெல்லும் வெடித்து சிதறும் அதாவது வெடிகுண்டின் நகங்கள், திருகுகள் மற்றும் இதர பொருட்கள் எல்லாமே வெடித்துச் சிதறடிக்கப்படும். 

அந்த துண்டுகள் - கட்டிடங்கள், கான்கிரீட், கட்டுமானம், கண்ணாடி மற்றும் மக்களை தாக்கும், துளைக்கும். அது எந்த அளவிற்கு துண்டு துண்டாக சிதறுகிறதோ அந்த அளவிற்கு பாதிப்புகள் அதிகமாகும். தீக்காயங்கள் தொடங்கி உடல் சிதறல்களை வரை ஒரு வெடிகுண்டு வெடிப்பானது ஒரு தீப்பந்தை மற்றும் தீவீரமாக வெப்பநிலையை உருவாக்கக்கூடும். இது ஒரு மனித உடலில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்கள் தொடங்கி உடல் சிதறல்களை வரை ஏற்படுத்தக்கூடும். 

இந்த பாதிப்பானது வெடிகுண்டில் ஏதேனும் எரிசக்தி ஆதாரங்கள் அல்லது எரியக்கூடிய பொருட்கள் உள்ளதா என்பதை பொறுத்து வேறுபடும். உந்துதலை நிகழ்த்திய வேகத்தில் ஒரு குண்டு வெடிப்பு தளத்தில், வெடிப்பின் வெளிப்படையான இயக்கம் மூலம் ஒரு வெற்றிடம் உருவாகும். அந்த வெற்றிடம் உடனடியாக சுற்றியுள்ள வளிமண்டலத்துள் நிரப்பப்படும். இந்த விளைவு அருகாமை நபர் அல்லது கட்டமைப்பின் மீது உந்துதலை நிகழ்த்திய வேகத்தில் ஒரு வலுவான இழுவைவை உருவாக்கும். மையத்தை நோக்கி மீண்டும் பொருட்களை உறிஞ்சும். 

குறிப்பிட்ட வெற்றிடம் நிரம்பியதின் விளைவாய் உயர்-தீவிர காற்று உருவாகி வெடிப்பு மூலங்களை நோக்கி பொருள்கள், கண்ணாடி மற்றும் குப்பைகள் இழுக்கப்படும். அதாவது சுருக்கமாக ஒரு குண்டுவெடிப்பில் எதிர்மறை அழுத்தமானது அதன் மையத்தை நோக்கி மீண்டும் பொருட்களை உறிஞ்சும். இவைகள் எல்லாமே சில நொடிகளுக்குள் நிகழும் ஆனால் பெரிய அளவிலான மற்றும் உயிர் சேதங்களை நிகழ்த்தும்.

0 comments: