துபாயில் உள்ள ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஆறு இலங்கை பாதுகாப்பாளர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனத்தில் இருந்து அவர்களால் 1,198,000 டினார் திருடப்பட்டுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் உள்ள ஒரு கடையின் பல கிளைகளுக்கு சொந்தமான பணத்தை திருடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
திருடப்பட்ட சில தொகை பணத்தை வைத்திருந்த இரண்டு இலங்கை சுத்திகரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு சுத்திகரிப்பாளர்களும் தங்கள் அடையாள அட்டைகளை பயன்படுத்தி, இலங்கை கணக்கிற்கு 84,000 டினார்களை மாற்றியுள்ளனர்.
அந்த 6 பாதுகாப்பாளர்களும் பெரிய பண தொகையை திருடியது போது அவர்களில் ஒருவர் அந்த பணத்தை பாதுகாத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அவர்கள் Al Rashidiyaவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தை பெற்றுக் கொண்டனர். அங்கு ஒவ்வொருவரும் 160,000 டினார் பணத்தை பெற்றுக் கொண்டனர். மீதமிருந்த ஏனைய செலவீனங்களுக்காக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
மே மாதம் 6 முதல் 10ஆம் திகதிகளுக்குள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சில நாட்களுக்கு முன்னர் இந்த திருட்டு சம்பவம் திட்டமிட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
பின்னர் பிரித்துக்கொண்ட பணத்தின் பெரும்பாலான அளவை பண பரிமாற்ற நிலையங்கள் மூலம் தங்கள் வீடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். (tw)
0 comments: