Sunday, 27 August 2017

BiggBoss வீட்டில் கணேஷை விட சாப்பாட்டை பற்றி அதிகம் நினைப்பது இவர்தான்- பிரபல நாயகி


சில மாதங்களுக்கு முன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒரு நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சி 50வது நாளை கடந்து மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் வையாபுரி எப்போதும் கணேஷ் அதிகம் சாப்பிடுகிறார் என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதனை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கணேஷின் உணவு பழக்கம் பற்றி வையாபுரியை தவிர வேறு யாரும் புகார் கூறுவது இல்லை. கணேஷை விட வையாபுரி தான் உணவை பற்றி அதிகம் யோசிக்கிறார்.
வையாபுரி எப்ப பார்த்தாலும் கணேஷ் சாப்பிடுவதை பற்றி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை! விருந்தோம்பலை மறந்தேன் வையாபுரி என்று டுவிட் செய்திருக்கிறார்.

0 comments: