விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ள நிலையில், தென்னிலங்கையில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் எழுச்சி பெறுவர் என்ற அச்சநிலை தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக Asia Pacific Daily (APD) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரதான விடயங்களை வலியுறுத்திய விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் நேற்றைய தினம் வவுனியா, குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன.
இந்நிலையிலேயே, தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான துண்டு பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளதாக பொலிஸார் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் Asia Pacific Daily (APD)க்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கில் மீளவும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு வாய்ப்பில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் Asia Pacific Daily (APD)க்கு கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்துடன் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: