தமிழகத்தில் நாளை முதல் ஆறு முக்கிய போக்குவரத்து விதிகளை மீறினால், வாகன ஓட்டியின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
நாளை முதல் தமிழகத்தில் வாகன ஓட்டிகள் தங்களது ஒரிஜனல் லைசென்ஸை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
இந்நிலையில், நாளையில் இருந்து போலீசாரின் வாகன சோதனை தீவிரமாக இருக்கும் என்றும், ஒரிஜனல் லைசென்ஸ் வைத்திருக்காவிட்டால் கட்டாயம் அபாரதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் சாலை விபத்தில் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு சாலை விபத்து மரணம் குறித்து ஆய்வு செய்ததில், ஆறு முக்கிய போக்குவரத்து விதிமீறல் தான் மரணத்திற்குக் காரணம் என்றும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சாலைவிபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்க நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி, ஆறு முக்கிய விதிகளை மீறுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஆறு முக்கிய விதி மீறல்கள் இது தான்;
1. அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்
2. சிக்னலை மதிக்காமல் செல்லுதல்
3. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுதல்
4. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
5. அதிகபாரம் ஏற்றி செல்லுதல்
6. சரக்கு வாகனத்தில் பயணிகள் செல்லுதல்
இந்த ஆறு விதிமீறல்கள் தான் விபத்தில் மரணம் ஏற்பட முக்கிய காரணிகளாக இருக்கிறது. இது போக மிகமிக முக்கியமானது தலைகவசம் அணியாமல் செல்லுதல் என்பது தான்.
இத்தகைய விதிகளை மீறுவோரிடம் தான் முதலில் ஒரிஜனல் லைசென்ஸ் கேட்கப்படும் என்றும் , அதற்காக மற்றவர்களுக்கு விலக்கு கிடையாது என்றும், அனைவரும் ஒரிஜனல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Intha mathiri mokka msg la pottu time waste pannunga eppadi makkal ta kasu pudungalam nu room pottu yosipingala da Intha Mayiru Modi irukura varaikum namma sagurathu confrm
ReplyDelete