மெக்ஸிக்கோவில் ஏற்பட்டுள்ள வலுவான நிலநடுக்கத்தால் குறைந்தது 60 பேர் மாண்டனர்.
85 ஆண்டுகளில் அதுவே ஆக வலுவான நிலநடுக்கம் எனக் கருதப்படுகின்றது. கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தெற்கு கரையோர பகுதியைக் கடந்த வியாழக்கிழமை(செப்டம்பர் 7) தாக்கியது.
0 comments: