Tuesday, 5 September 2017

அரசு பள்ளிகளில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் குழந்தைகள் சேர்ப்பு கட்டாயம் கர்நாடகாவில் விரைவில் அமல்படுத்த முடிவு!!

கர்நாடகத்தில் மத்திய அரசு இந்தி மொழியை மெட்ரோ ரெயில்மூலம் திணிக்கப் பார்க்கிறது என்று கன்னட வேதிகா சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் உள்ள வங்கிகளில் பணிபுரிவோர் கன்னட மொழியை கண்டிப்பாக கற்க வேண்டும் என்று விதிமுறை கொண்டு வரப்பட்டு, கன்னட மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், கர்நாடகத்தில் கன்னடத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையை தெரிவித்தார்.

இந்நிலையில்,  கர்நாடகத்தில் கன்னடமொழியை எவ்வாறு தீவிரமாக நடைமுறைப்படுத்துவது குறித்த பரிந்துரைகளை சமீபத்தில் கன்னட மேம்பாட்டு ஆணையம் முதல்வர் சித்தராமையாவிடம் அளித்தது.

இந்த கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக முதல்வர் சித்தராமையாவும், கல்வியாளர்கள் வி.பி. நிரஞ்சனராதயா, டி.எம். குமார், கன்னட சிந்தனையாளர் ரா.நாம். சந்திசேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் தாக்கல் செய்துள்ள 21 பரிந்துரைகளில் மிக முக்கியமானது, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதாகும். அப்போது தான் கல்வியின் தரத்தை உயர்த்த அவர்கள் மெனகெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பினால், எப்படி அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவார்கள்?.  என்றும் கன்னட மேம்பாட்டு ஆணையம் கேள்வி எழுப்பியது. அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த இதுதான் மிகச்சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ஒன்றாம் வகுப்பில் இருந்து, ஆங்கிலப்பாடங்களைக் கொண்டு வந்து, தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு போட்டியாக உருவெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை கர்நாடக மாநிலத்தில் 1,782 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அதேசமயம், 3,186 தனியார் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.  அரசுப்பள்்ளிகளில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளான சுகாதாரமான கழிப்பறை, குடிநீர், நூலகம், விளையாட்டு மைதானம் ஆகிய காகிதத்தின் அளவிலேயே இருக்கிறது. இந்தநிலையை மாற்ற வேண்டும். அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் போதுமான ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை பெற்றுக்கொண்ட பின் முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், “ தனியாரைப் போல், மழழையர் பள்ளிகள் அரசிடம் இல்லாததால், பெரும்பாலும் தனியார் பள்ளிகளைநோக்கியே மக்கள் செல்கிறார்கள். இதனால், 1-ம் வகுப்பில் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதைத் தடுக்க அரசு சார்பில் மழழையர் பள்ளி தொடங்கப்படும். இந்த பரிந்துரைகள் அனைத்தும் படிப்படியாக அமல்படுத்தப்படும்’’ என்றார்.

0 comments: